உலகம்

புகைப்பட பத்திரிகையாளர் சித்திகி மறைவிற்கு ஐநா இரங்கல்

17th Jul 2021 12:19 PM

ADVERTISEMENT

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் பலியான இந்தியப் புகைப்பட பத்திரிகையாளர் டேனிஷ் சித்திகி மறைவிற்கு ஐக்கிய நாடுகள் அவை இரங்கல் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் ராணுவத்தினருக்கும், தலிபான் அமைப்பினருக்கும் இடையே நடந்து வரும் மோதலை படம் பிடிக்கச் சென்ற இந்தியப் புகைப்படப் பத்திரிகையாளர் டேனிஷ் சித்திகி தலிபான்கள் நடத்திய தாக்குதலில் வியாழக்கிழமை இரவு பலியானார்.

அவரது மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஐக்கிய நாடுகள் அவை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “புகைப்பட பத்திரிகையாளர் சித்திகியின் மரணம் ஆப்கானிஸ்தானில் ஊடகங்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களை வெளிக்காட்டியுள்ளது. ஆப்கானிஸ்தானில் பணியாற்றி வரும் ஊடகத்தினர் தொடர்ந்து அச்சுறுத்தல்களுக்கு ஆளாகி வருகின்றனர். தலிபான்களின் தாக்குதலால் பலியான சித்திகி மறைவிற்கு அவரது குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” எனத் தெரிவித்துள்ளது.

மேலும் ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் மோதல்களை முடிவுக்குக் கொண்டு வரவும், சித்திகி மரணம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளவும் ஐக்கிய நாடுகள் அவை வலியுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT

Tags : UN DanishSiddiqui
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT