உலகம்

‘அவர் இருந்தது தெரியாது’: பத்திரிகையாளர் சித்திகி மரணத்திற்கு மன்னிப்பு கேட்ட தலிபான்கள்

17th Jul 2021 03:35 PM

ADVERTISEMENT

ஆப்கானிஸ்தானில் பலியான புகைப்பட பத்திரிகையாளர் சித்திகி மறைவிற்கு தலிபான் அமைப்பினர் மன்னிப்பு கோரியுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் ராணுவத்தினருக்கும், தலிபான் அமைப்பினருக்கும் இடையே நடந்து வரும் மோதலை படம் பிடிக்கச் சென்ற இந்தியப் புகைப்படப் பத்திரிகையாளர் டேனிஷ் சித்திகி தலிபான்கள் நடத்திய தாக்குதலில் வியாழக்கிழமை இரவு பலியானார்.

இந்நிலையில் அவரது மரணத்திற்கு மன்னிப்பு கோரியுள்ள தலிபான் அமைப்பினர் சித்திகி மோதல் நடந்த இடத்தில் இருந்தது தங்களுக்கு தெரியாது என தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள தலிபான் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஸபியுல்லா முஜாஹித், “மோதல் நடைபெற்ற பகுதியில் பத்திரிகையாளர் இருந்தது எங்களுக்குத் தெரியாது. இத்தகைய நிகழ்வுகளில் செய்தியாளர்கள் இருப்பதை எங்களுக்கு முறையாக தெரிவித்தால் மட்டுமே குறிப்பிட்ட இம்மாதிரியான சூழல்களில் அவர்களை பாதுகாக்க முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

Tags : Taliban DanishSiddiqui
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT