உலகம்

‘ஸ்டேன் சுவாமி மரணம் இந்திய மனித உரிமை வரலாற்றில் ஏற்பட்ட கறை’: ஐ.நா.

17th Jul 2021 01:15 PM

ADVERTISEMENT

மனித உரிமைகள் ஆர்வலரான ஸ்டேன் சுவாமியின் மரணச் செய்தி தன்னைப்  பெரும் சோகத்தில் ஆழ்த்தியதாக ஐக்கிய நாடுகள் அவையின் மனித  உரிமை ஆர்வலர் கருத்துத் தெரிவித்துள்ளார். 

எல்கர் பரிஷத் - மாவோயிஸ்ட் தொடர்புகள் தொடர்பான வழக்கில் உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த மனித உரிமைகள் ஆர்வலரான ஸ்டேன் சுவாமி ஜூலை 5 ஆம் தேதி உயிரிழந்தார். 

இதுகுறித்து ஐ.நா. சிறப்பு செய்தித் தொடர்பாளர் மேரி லாலர் வெளியிட்ட அறிக்கையில், "எந்த ஒரு தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் இல்லாமல் கைது செய்யப்படும் மனித உரிமை ஆர்வலர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பதைத்தான் ஸ்டேன் சுவாமியின் மரணம் நமக்கு உணர்த்துகிறது.

40 ஆண்டுகளுக்கும் மேலாக மனித உரிமைகளுக்காகவும் சமூக நீதிக்காகவும் போராடிய கத்தோலிக்க பாதிரியாரான ஸ்டேன் சுவாமியின் மரணம் இந்திய மனித உரிமைகள் வரலாற்றில் ஏற்பட்ட கறை.

ADVERTISEMENT

மனித உரிமைகள் ஆர்வலரான அவரைத் தீவிரவாதி போல் நடத்தியதை ஒரு போதும் மன்னிக்க முடியாது. உரிமைகள் மறுக்கப்பட்டுப் பலியான ஸ்டேன் சுவாமி போல் இனி யாரும் உயிரிழக்கக் கூடாது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளார். 

இதனிடையே, ஸ்டேன் சுவாமியின் மரணத்தைத் தொடர்ந்து சர்வதேச அளவில் இந்தியா மீது முன்வைக்கப்பட்ட கடும் விமர்சனங்களை மறுத்த வெளியுறவுத் துறை அமைச்சகம், "சட்டத்தை மீறி செயல்பட்டதற்காகவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உரிமைகளை நிலைநாட்டியதற்கு எதிராக அல்ல" என விளக்கமளித்துள்ளது.

Tags : United Nations Stan Swamy
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT