உலகம்

ஜெர்மனியில் வெள்ளபாதிப்பு: பலி எண்ணிக்கை 150 ஆக உயர்வு

17th Jul 2021 04:54 PM

ADVERTISEMENT

மேற்கு ஜெர்மனியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் பலியானவர்களின் எண்ணிக்கை 150 ஆக அதிகரித்துள்ளது.

மேற்கு ஜெர்மனியில் புதன்கிழமை முதல் பெய்து வரும் கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தால் ஜெர்மனியின் அண்டை நாடுகளான பெல்ஜியம், நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. 

இந்த திடீர் வெள்ளத்தால் வீடுகள், அடுக்குமாடி கட்டடங்கள், பாலங்கள் என அனைத்தும் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. பல குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதுவரை வெள்ள பாதிப்பால் 150 பேர் பலியாகியுள்ளதாக தெரிவித்துள்ள ஜெர்மனி அரசு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

Tags : Germany Flood
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT