உலகம்

வெவ்வேறு தடுப்பூசிகளை செலுத்திக்கொள்வது ஆபத்தானது: உலக சுகாதார அமைப்பு

13th Jul 2021 12:59 PM

ADVERTISEMENT

இரு வெவ்வேறு தடுப்பூசிகளை செலுத்திக்கொள்வது என்பது ஆபத்தான போக்கு என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பல்வேறு நாடுகளில் தடுப்பூசி பற்றாக்குறை பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, வளர்ந்துவரும் மற்றும் பின்தங்கிய நாடுகளில் மக்களுக்கு இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தும்போது இரண்டு வெவ்வேறு நிறுவனங்கள் தயாரித்த தடுப்பூசிகள் அளிக்கப்படுகிறது.

இது ஆபத்தான போக்கு என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி செளம்யா சுவாமிநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இணைய செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் இதுகுறித்து கூறுகையில், "இது சற்று ஆபத்தான போக்கு. இரண்டு வெவ்வேறு நிறுவனங்கள் தயாரித்த தடுப்பூசிகள் செலுத்தி கொள்வதால் என்ன தாக்கங்கள் ஏற்படும் என்பது குறித்த ஆதாரங்களோ தரவுகளோ நம்மிடம் இல்லை.

ADVERTISEMENT

இரண்டாம், மூன்றாம், நான்காம் தவணை தடுப்பூசிகளை எப்போது யார் செலுத்த வேண்டும் என்பதை மக்களே முடிவெடுத்தால் அது குழப்பமான சூழலை  ஏற்படுத்தும்" என்றார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT