ஹைதி நாட்டு அதிபர் ஜோவனல் மோயிஸ் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு அமெரிக்க அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
ஹைதி நாட்டு அதிபராக இருந்த ஜோவனல் மோயிஸ் செவ்வாய்க்கிழமை அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் அவரது இல்லத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார்
இந்நிலையில் அவரது கொலைக்கு அமெரிக்க அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இரங்கல் செய்தி வெளியிட்டுள்ள அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பு செயலர் ஜென்சாகி இது கொடூரமான குற்றம் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் ஹைதிக்கு தேவையான எந்தவிதமான உதவியையும் வழங்க அமெரிக்கா தயாராக உள்ளதாக அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.