ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 23,962 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அந்த நாட்டில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 56,82,634 ஆக உயர்ந்துள்ளது.
புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 2,938 பேருக்கு (12.3 சதவிகிதம்) எவ்வித அறிகுறியும் இல்லாமல் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாஸ்கோவில் அதிகபட்சமாக தினசரி பாதிப்பு 5,621 ஆகப் பதிவாகியுள்ளது.
மேலும் 725 பேர் நோய்த் தொற்றுக்கு பலியானதையடுத்து, அந்த நாட்டில் மொத்த பலி எண்ணிக்கை 1,40,041 ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம், கடந்த 24 மணி நேரத்தில் 20,067 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை மொத்தம் 51,21,919 ஆக உயர்ந்துள்ளது.