ரஷியவில் ஒரேநாளில் 23,543 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறிதுது அந்நாட்டின் சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 23,543 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக தலைநகர் மாஸ்கோவில் 7,597 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 55,38,142ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால் இன்று மேலும் 672 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 1,35,886ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கரோனாவிலிருந்து 16,928 பேர் குணமடைந்தனர்.
இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 5,017,321ஆக உயர்ந்துள்ளது.