காந்தி நினைவு நாளான இன்று (ஜன.30) அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் காந்தி சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவிலுள்ள டாவிஸ் பகுதியில் அமைந்துள்ள சென்ட்ரல் பூங்காவில் காந்தி சிலை நிறுவப்பட்டுள்ளது.
ஆறு அடி உயரமும், 294 கிலோ எடையுடன் கூடிய வெண்கல காந்தி சிலை பூங்காவின் மையப்பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் காந்தி சிலையின் முகம் மற்றும் கணுக்கால்களில் சேதங்களை ஏற்படுத்தியுள்ளனர்.
காந்தி நினைவு நாளான இன்று காந்தி சிலை சேதமடைந்து காணப்பட்டதால், அமெரிக்க வாழ் இந்தியர்கள் இந்த நிகழ்விற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே காந்தி சிலையை சேதப்படுத்திய நபர்கள் குறித்தும், அதற்கான நோக்கம் குறித்தும் கலிபோர்னியா மாகாண காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.