உலகம்

பெல்ஜியத்தில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு புதியவகை கரோனா 

30th Jan 2021 12:22 PM

ADVERTISEMENT

 

பெல்ஜியத்தில் கடந்த ஒரு வாரத்தில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு புதிய வகை கரோனா வைரஸ் தொற்று இருமடங்காகத் தாக்கியுள்ளதாக உயர் சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில், 

பெல்ஜியத்தில் கரோனா அதிகரிப்பு விகிதம் 128 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதில் 41 சதவீதம் இளம் வயதினருக்கு இந்த வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

தற்போது பெல்ஜியத்தில், கண்டறியப்பட்ட புதிய வகை கரோனாவுக்கு மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிலும் கடந்த ஒரு வாரமாக 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அதிகம் தாக்கியுள்ளது. 

இந்த புதிய வகை கரோனா தாக்கம், பெரும்பாலும் பள்ளிகளிலும், நேரடி பிரசாரங்களிலும் பரவியிருக்கலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பெல்ஜியத்தில் இதுவரை மொத்தம் 7,02,437 பேர் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பொதுச் சுகாதார நிறுவனம் சியென்சானோ வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இறப்பு எண்ணிக்கை 20,982 ஆக உள்ளது.

வைரஸ் பரவுவதைத் தடுக்க அந்நாடு முழுவதும் தடுப்பூசி போடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT