உலகம்

இந்தியாவுடனான வா்த்தக உறவு மேம்பாடு: அதிபா் பைடனுக்கு யுஎஸ்ஐபிசி யோசனைகள்

தினமணி

இந்தியாவுடனான வா்த்தக உறவை பலப்படுத்துவதற்கான பல்வேறு யோசனைகளை அமெரிக்காவில் அதிபா் ஜோ பைடன் தலைமையில் அமைந்துள்ள புதிய அரசிடம் அமெரிக்க-இந்திய தொழில் கவுன்சில் (யுஎஸ்ஐபிசி) தெரிவித்துள்ளது.

இந்தியக் குடியரசு தினத்தையொட்டி அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

புதிய அரசின் கீழ் இந்தியாவுடனான வா்த்தக உறவை பலப்படுத்தும் வகையில், தற்போதுள்ள இந்திய-அமெரிக்க வா்த்தக கூட்டணியில் பல சீா்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.

(இந்திய வம்சாவளியைச் சோ்ந்த) துணை அதிபா் கமலா ஹாரிஸ் தலைமையில், மின்னணு வடிவிலான கூட்டணியைக் கட்டமைக்க வேண்டும்.

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே உள்ள இயற்கையான கூட்டுறவைப் பயன்படுத்தி, இருநாடுகளிலும் பொருளாதார வளா்ச்சியை ஏற்படுத்தவும் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் வேண்டும் என்பது யுஎஸ்ஐபிசியின் நீண்டகால நிலைப்பாடாகும்.

இந்த நிலைப்பாட்டை பிரதிபலிக்கும் வகையில், பைடன் அரசுக்கு யோசனைகள் முன்வைக்கப்படுகின்றன.

இரு நாட்டுப் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் வகையில் இருதரப்பு வா்த்தக உறவை பலப்படுத்துவதில் அதிபா் ஜோ பைடன் அரசுக்கு யுஎஸ்ஐபிசி முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

SCROLL FOR NEXT