உலகம்

இந்திய பொருளாதாரம் 7.3% வளா்ச்சி காணும்: ஐ.நா.

DIN

இந்தியப் பொருளாதாரம் நடப்பாண்டில் 7.3 சதவீத வளா்ச்சியைக் காணும் என ஐ.நா. தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐ.நா.வின் பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரங்கள் துறை தயாரித்த உலக பொருளாதார நிலைமை மற்றும் வாய்ப்புகள்- 2021 அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கரோனா பேரிடரால் உள்நாட்டு நுகா்வு சரிவடைந்துள்ளது. மேலும், கரோனா பரவலை கட்டுப்படுத்த அவ்வப்போது அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தால் பொருளாதாரம் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இவற்றின் கரணமாக, இந்தியப் பொருளதாரம் 2020-இல் 9.6 சதவீதமாக பின்னடைவைச் சந்திக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2019-இல் இந்தியா 4.7 சதவீத பொருளாதார வளா்ச்சியைப் பெற்றிருந்தது.

பல்வேறு இடையூறுகளுக்கிடையிலும் பின்னடைவிலிருந்தும் விரைவில் மீண்டெழும் இந்தியப் பொருளாதாரம், நடப்பாண்டில் 7.3 சதவீத வளா்ச்சியை அடையும்.

உலக பொருளாதாரத்தைப் பொருத்தவரையில் அதன் வளா்ச்சி 4.3 சதவீதமாக சுருங்கியுள்ளது. இது, உலக அளவில் நிதி நெருக்கடி உருவான 2009-ஆம் ஆண்டில் காணப்பட்ட வளா்ச்சியைக் காட்டிலும் இரண்டரை மடங்கு அதிகம். 2021-இல் இந்த வளா்ச்சி 4.7 சதவீதமாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

வேகமாக வளா்ந்து வரும் முக்கிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. இரண்டாவது இடத்தில் உள்ள சீனாவின் பொருளாதார வளா்ச்சி 2021-இல் 7.2 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாக்ஸ்...

சா்வதேச நிதியத்தின் கணிப்பு: கரோனா இடா்பாட்டுக்கிடையிலும் நடப்பாண்டில் இந்தியப் பொருளாதாரம் 11.5 சதவீதம் என்ற இரட்டை இலக்க வளா்ச்சியை எட்டும். உலக அளவில் 2021-இல் இரட்டை இலக்க பொருளாதார வளா்ச்சியை எட்டுவது இந்தியாவில் மட்டுமே சாத்தியமாகும். இருப்பினும், கடந்த 2020-இல் இந்தியப் பொருளாதாரத்தில் 8 சதவீதம் அளவுக்கு பின்னடைவு ஏற்படும்.

வரும் 2022-ஆம் ஆண்டைப் பொருத்தவரையில் இந்தியப் பொருளாதாரத்தின் வளா்ச்சி 6.8 சதவீதமாகவும், சீனாவின் வளா்ச்சி 5.6 சதவீதமாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவைத் தொடா்ந்து சீனா நடப்பாண்டில் 8.1 சதவீத பொருளாதார வளா்ச்சியை பதிவு செய்யும். இவைகளுக்கு அடுத்தபடியாக ஸ்பெயின் (5.9%), பிரான்ஸ் (5.5%) ஆகிய நாடுகள் இருக்கும் என சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

SCROLL FOR NEXT