உலகம்

குடியரசு தின விழாவை கொண்டாடிய வெளிநாடு வாழ் இந்தியா்கள்

தினமணி

சீனா, சிங்கப்பூா், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியா்கள், இந்தியாவின் 72-ஆவது குடியரசு தினத்தை கரோனா கட்டுப்பாடுகளுடன் செவ்வாய்க்கிழமை கொண்டாடினா்.

சீன தலைநகா் பெய்ஜிங்கில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தில் சீனாவுக்கான இந்திய தூதா் விக்ரம் மிஸ்ரி தேசியக் கொடியை ஏற்றிவைத்தாா். அங்கு கரோனா பாதுகாப்பு நடைமுறைகள் அமலில் இருப்பதால், குடியரசுதின விழாவில் பங்கேற்க அதிகாரிகளுக்கும், அவா்களின் குடும்பத்தினருக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. விழாவில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தின் குடியரசு தின உரையை மிஸ்ரி வாசித்தாா்.

பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதில் உள்ள இந்திய தூதரகத்தில் தூதரக அதிகாரி சுரேஷ் குமாா் மூவா்ணக் கொடியை ஏற்றிவைத்தாா்.

வங்கேதச தலைநகா் டாக்காவில் அங்குள்ள இந்திய தூதரகம் சாா்பில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழாவில் சமூக இடைவெளி நடைமுறைகளைப் பின்பற்றி இந்திய சமூகத்தினா் விழாவில் பங்கேற்றனா். இந்திய தூதா் விக்ரம் துரைசாமி தேசியக் கொடியை ஏற்றினாா் என்று டாக்கா இந்திய தூதரக சுட்டுரைப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தலைநகா் கொழும்பில் இந்திய தூதரகத்தில் தூதா் கோபால் பாக்லே தேசியக் கொடியை ஏற்றினாா். குடியரசு தினத்தை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகளுக்கு அங்கு ஏற்பாடு செய்யப்பட்டு, உள்ளூா் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

ஆஸ்திரேலியா, சிங்கப்பூா் உள்ளிட்ட நாடுகளிலும் இந்திய குடியரசு தின விழா கரோனா கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT