உலகம்

கிரீஸில் 2 கோடி ஆண்டுகள் பழமையான புதைபடிவ மரம் கண்டுபிடிப்பு

27th Jan 2021 04:29 PM

ADVERTISEMENT

கிரீஸ் நாட்டின் எரிமலைத் தீவான லெஸ்போஸில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 2 கோடி ஆண்டுகள் பழமையான மரம் மற்றும் அதன் வேர்ப் பகுதிகள் உள்ளிட்ட புதைபடிவம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மத்தியதரைக் கடல் தீவான லெஸ்போஸில் உள்ள பெட்ரிஃபைட் காடு யுனெஸ்கோ அமைப்பால் பாதுகாக்கப்பட்ட தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் சாலைப் பணிகளுக்காக மேற்கொள்ளப்பட்ட பணிகளின் போது பழமையான மரத்தின் புதைபடிவங்கள் கண்டெடுக்கப்பட்டன.

புதைபடிவமாகக் கிடைத்துள்ள இந்த மரத்தின் கிளைகள் மற்றும் வேர் பகுதிகள் ஆய்வுக்குரிய வகையில் நல்ல நிலையில் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த புதைபடிவத்தை ஆராய்வதின் மூலம் இது எந்த வகையான தாவரத்திலிருந்து வந்தது என்பதை கண்டறிய முடியும் என பெட்ரிஃபைட் வனத்தின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் பேராசிரியர் நிகோஸ் ஜூரோஸ் தெரிவித்துள்ளார்.

சுமார் 19 மீட்டர் நீளமுள்ள புதைபடிவ மரம், விழுந்தபின் எரிமலை வெடிப்பின் மூலம் ஏற்பட்ட சாம்பலால் அடுக்கினால் மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT

Tags : Greece
ADVERTISEMENT
ADVERTISEMENT