உலகம்

கேமரூனில் பேருந்து – ட்ரக் மோதலில் 14 பேர் பலி

27th Jan 2021 05:36 PM

ADVERTISEMENT

 

யவுண்டே: ஆப்பிரிக்க நாடான கேமரூனில் பேருந்து – ட்ரக் நேருக்கு நேராக மோதிய விபத்தில் 14 பேர் பலியானார்கள்.

கேமரூனின் மேற்குப் பகுதியில் உள்ள சாங் நகரில் புதன் அதிகாலை இந்த விபத்து நடந்துள்ளது. இதுதொடர்பாக உள்ளூர் காவல்துறை அதிகாரி ஜோன்ஸ் நந்தாவின் பேட்டியை மேற்கோள் காட்டி சின்ஹுவா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளதாவது:

உள்ளூர் நேரப்படி புதன் அதிகாலை 3.30 மணியளவில் குறுகலான சாலைப் பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் இதுவரை 14 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 38 பேர் படுகாயமடைந்துள்ளார்கள். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் சடலங்களைத் தேடும் பணி நடந்து வருகிறது.

ADVERTISEMENT

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT