உலகம்

பைடன் நிர்வாகத்தில்  மேலும் சில முக்கிய பொறுப்புகளில் இந்திய அமெரிக்கர்கள் நியமனம்

26th Jan 2021 07:41 AM

ADVERTISEMENT

 

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் ஆட்சி நிர்வாகத்தில் மேலும் சில இந்திய அமெரிக்கர்கள் முக்கியமான பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்க அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக கமலா ஹாரிஸூம் கடந்த 20}ஆம் தேதி பதவியேற்றனர். பைடன் பதவியேற்புக்கு முன்னரே வெள்ளை மாளிகை உள்பட பல்வேறு முக்கியமான பொறுப்புகளில் இந்திய வம்சாவளி அமெரிக்கர்கள் 20 பேர் நியமனம் செய்யப்பட்டனர். இந்நிலையில், மேலும் சில இந்திய அமெரிக்கர்களுக்கும் முக்கியமான பொறுப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, அமெரிக்க எரிசக்தி துறைத் தலைவராக தரக் ஷா நியமிக்கப்பட்டுள்ளார். அறிவியல் அலுவலக தலைவராக தன்யா தாஸ், பொது ஆலோசனை அலுவலக சட்ட ஆலோசகராக நாராயண் சுப்ரமணியன், புதைபடிவ எரிசக்தி அலுவலகத்தின் தலைவராக சுச்சி தலாட்டி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

மேலும், சர்வதேச மேம்பாட்டு நிதிக் கழகத்தின் செயல் தலைவராக தேவ் ஜெகதீசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT