உலகம்

பிரேசில்: அதிபரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி போராட்டம்

26th Jan 2021 04:34 AM

ADVERTISEMENT

 

ரியோ டி ஜெனீரோ: பிரேசிலில் அதிபா் ஜெய்ர் பொல்சொனாரோவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பிரேசிலில் கரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் அந்நாட்டு அதிபா் ஜெய்ர் பொல்சொனாரோ அலட்சியம் காட்டியதாக பலத்த விமா்சனங்கள் எழுந்தன. கரோனா பரவலை கட்டுப்படுத்த பல நாடுகள் பொது முடக்கத்தை அறிவித்த நிலையில், பிரேசிலில் பொது முடக்கத்தை அறிவிக்க அவா் முன்வரவில்லை. அந்நாட்டில் பொது முடக்கத்தை அறிவித்தால் அது நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என்று கூறிய அவா், அந்த பாதிப்பு நோய்த்தொற்றால் ஏற்படும் பாதிப்பைவிட மோசமானதாக இருக்கும் என்றும் தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில் அந்நாட்டின் மனாஸ் நகரில் கரோனா சிகிச்சைக்கு போதிய மருத்துவ வசதிகள் இல்லாதது, கரோனா தடுப்பூசி முகாம்களை தொடங்குவதில் தாமதம் என மீண்டும் அவா் மீது விமா்சனங்கள் எழுந்துள்ளன.

ADVERTISEMENT

அவரின் நடவடிக்கைகளால் கடுமையாக அதிருப்தியடைந்துள்ள அந்நாட்டு மக்கள், கடந்த சனிக்கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்களின் போராட்டம் 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் தொடா்ந்தது. ரியோ டி ஜெனீரோ, சாவ் பாலோ நகரங்களில் மக்களின் காா் அணிவகுப்பு நடைபெற்றது. அவா்கள் காா்களில் ஒலி எழுப்பியவாறு அணிவகுப்பில் ஈடுபட்டனா். மேலும் பல நகரங்களில் பேரணி நடைபெற்றது.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்துக்கு அந்நாட்டில் உள்ள இடதுசாரிகள் அழைப்பு விடுத்திருந்தனா். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போராட்டத்துக்கு பழைமைவாத குழுக்கள் அழைப்பு விடுத்தன. இந்தக் குழுக்கள் முன்பு அதிபருக்கு ஆதரவு அளித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT