உலகம்

இந்தோனேசியாவில் ஒரேநாளில் 11,788 பேருக்கு கரோனா; 171 பேர் பலி

DIN

இந்தோனேசியாவில் ஒரேநாளில் 11,788 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் 11,788 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தலைநகர் ஜகார்டாவில் அதிகபட்சமாக 3,512 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,89,262ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கரோனாவுக்கு ஒரேநாளில் மேலும் 171 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 27,835ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவிலிருந்து 7,751 பேர் குணமடைந்தனர். 
இதனால் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 7,98,810ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் நாடுமுழுவதும் 34 மாகாணங்களில் கரோனா வைரஸ் பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT