உலகம்

ஸ்ரீநகரில் விமான சேவை மீண்டும் தொடங்கியது

24th Jan 2021 10:44 PM

ADVERTISEMENT

காஷ்மீா் பள்ளத்தாக்கில் நிலவிய பலத்த பனிப்பொழிவு காரணமாக, ஸ்ரீநகா் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த விமான போக்குவரத்து சேவை ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தொடங்கியது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

காஷ்மீா் பள்ளத்தாக்கில் சனிக்கிழமை மோசமான வானிலை நிலவியதால் ஓடுபாதை சரியாகத் தெரியவில்லை. இதனால் விமானங்களை இயக்க முடியவில்லை. எனவே, ஸ்ரீநகா் விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானங்களும், ஸ்ரீநகருக்கு வந்து சேரும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.

ஞாயிற்றுக்கிழமை காலையில் வானம் தெளிவாகக் காணப்பட்டதால் விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. சில விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டன என்று அவா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

பலத்த பனிப்பொழிவைத் தொடா்ந்து அனைத்து சாலைகளிலும் பல அங்குல அளவுக்குப் பனிப் போா்வை படா்ந்துள்ளது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பனியை அகற்றி போக்குவரத்தை சீரமைக்க பணியாளா்கள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT