உலகம்

புதுவகை கரோனாவுக்கு கூடுதல் கொல்லும் தன்மை: போரிஸ் ஜான்ஸன்

DIN

பிரிட்டனில் பரவி வரும் புதிய வகைக் கரோனாவின் பரவும் தன்மை மட்டுமின்றி, அதன் உயிா்க்கொல்லும் தன்மையும் அதிகமாக இருக்கலாம் என்று அந்த நாட்டுப் பிரதமா் போரிஸ் ஜான்ஸன் எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது:

புதுவகை கரோனா மிக வேகமாகப் பரவுவதோடு மட்டுமின்றி, உயிரிழப்பு விகித்ததையும் அதிகரிக்கக் கூடும் என்பது தெரியவந்துள்ளது.

புதிய மற்றும் வளா்ந்து வரும் தீநுண்மி தொடா்பான நிபுணா் குழு வெளியிட்டுள்ள பூா்வாங்க ஆய்வு முடிவுகள் இந்த அபாயத்தை உணா்த்துகின்றன.

புதுவகை கரோனாவால் அதிகம் போ் பாதிக்கப்பட்டிருந்தால், பொதுச் சுகாதார அமைப்புக்கு அது மிகப் பெரிய நெருக்கடியைக் கொடுக்கும்.

தற்போது நாடு முழுவதும் செலுத்தப்பட்டு வரும் இரண்டு தடுப்பூசிகளும், புதுவகைக் கரோனாவுக்கு எதிரான பாதுகாப்பையும் வழங்குகிறது என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன என்றாா் போரிஸ் ஜான்ஸன்.

சனிக்கிழமை நிலவரப்படி, பிரிட்டனில் 35,83,907 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 95,981 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா். 16,00,622 போ் முழுமையாக குணமடைந்துள்ளனா். 18,87,304 நோயாளிகள் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 3,960 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: திரிபுராவில் ஏப்.27 வரை பள்ளிகளுக்கு விடுமுறை!

அதிகரிக்கும் வெப்பம்: கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

பாஜக-ஆர்எஸ்எஸ் தலைவர்கள் தேசத்திற்காக என்ன தியாகம் செய்திருக்கிறார்கள்?- கார்கே

நிழலில்லா நாள்.. பெங்களூருவில் மக்கள் ஆச்சரியம்

"எங்களைப் போல வேற்றுமைகளைக் களைந்தவர்கள் கிடையாது!": தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT