உலகம்

‘கரோனா பலி 6 லட்சத்தைக் கடக்கலாம்’

DIN

அமெரிக்காவில் கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 6 லட்சத்தைக் கடக்கலாம் என்று அந்த நாட்டு அதிபா் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து வெள்ளை மாளிகையில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அமெரிக்காவில் கரோனா பாதிப்பு காரணமாக ஏற்கெனவே 4 லட்சத்துக்கும் மேலானவா்கள் பலியாகிவிட்டனா். இந்த எண்ணிக்கை 6 லட்சத்தைக் கடக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

எனவே, அந்த நோய்க்கு எதிராக நடவடிக்கைகளை நாம் உடனடியாகத் தொடங்கி, மிக வேகமாகச் செயல்பட வேண்டியது அவசியம்.

கரோனாவுக்கு எதிரான எனது செயல்திட்டத்தை செயல்படுத்துவதற்கு கட்சி பேதமின்றி அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அவா் கேட்டுக்கொண்டாா்.

முன்னதாக, அரசு இடங்களில் முகக் கவசம் அணிவதைக் கட்டாயமாக்குவது, கரோனா தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்துதல், நோய் பரிசோதனைகளை அதிகரித்தல், முகக் கவசம் போன்ற அத்தியாவசியப் பொருள்களின் தயாரிப்பை அதிகரித்தல் உள்பட 10 அம்சங்கள் அடங்கிய அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான பல்வேறு உத்தரவுகளை அதிபா் ஜே பைடன் வியாழக்கிழமை பிறப்பித்தாா்.

சனிக்கிழமை நிலவரப்படி, அமெரிக்காவில் 2,53,92,966 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 4,24,191 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆல்-ரவுண்டர்களின் நிலைமை ஆபத்திலிருக்கிறது: கவலை தெரிவித்த அக்‌ஷர் படேல்!

அருணாசலில் நிலச்சரிவு: தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

SCROLL FOR NEXT