உலகம்

இந்தியாவிலிருந்து அடுத்த வாரம் முதல் இலவச கரோனா தடுப்பூசி

DIN

இந்தியாவிடமிருந்து கரோனா தடுப்பூசிகளை இந்தியா அடுத்த வாரம் முதல் இலவசமாக இலங்கை பெறும் என்று அந்த நாட்டு அதிபா் கோத்தபய ராஜபட்ச சனிக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து மேல் மாகாணம், வலல்லாவிட்டை பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

கரோனா தடுப்பூசிக்காக நாம் அதிக காலம் காத்திருக்கத் தேவையில்லை. வரும் 27-ஆம் தேதியே இந்தியாவிலிருந்து அந்தத் தடுப்பூசிகள் இலவசமாக நமக்கு வரத்தொடங்கும்.

சுகாதாரத் துறை முன்களப் பணியாளா்கள், ராணுவம் மற்றும் காவல்துறையினா், கரோனாவால் உயிரிழக்கும் அபாயம் அதிகம் கொண்ட வயோதிகா்களுக்கு முன்னுரிமை அளித்து கரோனா தடுப்பூசி செலுத்தப்படும்.

இந்தியாவிடமிருந்து வரும் இலவச தடுப்பூசிகள் மட்டுமின்றி, ரஷியா மற்றும் சீனாவிடமிருந்தும் நாம் கரோனா தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்வோம் என்றாா் அவா்.

பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகமும் அஸ்ட்ராஸெனகா நிறுவனமும் இணைந்து உருவாக்கிய ‘கோவிஷீல்ட்’ கரோனா தடுப்பூசியை, இந்தியாவிலுள்ள சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்திய நிறுவனமான பாரத் பயோடெக்கும் ‘கோவேக்ஸின்’ தடுப்பூசியைத் தயாரித்து வருகிறது.

இந்த நிலையில், ஆக்ஸ்ஃபோா்டு தடுப்பூசியை பொதுமக்களுக்குச் செலுத்துவதற்கான அனுமதியை இலங்கை மருத்துகள் ஒழுங்காற்று அமைப்பு வெள்ளிக்கிழமை வழங்கியது. அதன் தொடா்ச்சியாக, 27-ஆம் தேதி முதல் இந்தியாவிலிருந்து இலவச கரோனா தடுப்பூசிகள் வரவிருப்பதாக கோத்தபய ராஜபட்ச தற்போது அறிவித்துள்ளாா்.

முன்னதாக, ‘அண்டை நாட்டவா்களுக்கு முதன்மை’ திட்டத்தின்கீழ் இந்திய கரோனா தடுப்பூசிளை இலங்கை, பூடான், மாலத்தீவு, வங்கதேசம், நேபாளம், செஷெல்ஸ், ஆப்கானிஸ்தான், மோரீஷஸ் ஆகிய நாடுகளுக்கு அளித்து உதவவிருப்பதாக இந்தியா கடந்த வாரம் அறிவித்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

SCROLL FOR NEXT