ரஷியாவில் புதிதாக 20,921 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில்,
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 20,921 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 2,351பேருக்கு எந்த அறிகுறியும் தென்படவில்லை. அதில், அதிகபட்சமாக செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் 3,056 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 36,98,273 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கரோனாவுக்கு இன்று மேலும் 559 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 68,971ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 27,779 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இதையடுத்து குணமடைந்தோர் எண்ணிக்கை 31,09,315 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.