உலகம்

ஜிம்பாப்வேவில் கரோனாவுக்கு மேலும் ஓர் அமைச்சர் பலி

23rd Jan 2021 03:55 PM

ADVERTISEMENT

ஜிம்பாப்வே போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு துறை அமைச்சர் ஜோயல் மடிசா கரோனா பாதிப்பால் நேற்று உயிரிழந்தாா். 
ஜிம்பாப்வேயில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்த கரோனா பரவல், அண்மைக் காலமாக மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 639 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிகை 30,000ஆக உயர்ந்துள்ளது. 
இந்த நிலையில் அந்நாட்டின் போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு அமைச்சர் ஜோயல் மடிசா கரோனா பாதிப்பால் நேற்று உயிரிழந்தாா். கடந்த ஒரு வாரத்தில் ஜிம்பாப்வே நாட்டில் கரோனாவுக்கு பலியாகும் 3ஆவது அமைச்சர் இவர் ஆவார். 
முன்னதாக அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சா் சிபுசிஸோ மோயோ கரோனா பாதிப்பால் ஜன.15ஆம் தேதி உயிரிழந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது. 


 

Tags : Zimbabwe
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT