உலகம்

பிரிட்டன் விமானங்களுக்கு போர்த்துகல் தடை

22nd Jan 2021 08:49 PM

ADVERTISEMENT

புதிய வகை கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பிரிட்டன் விமானங்களுக்கு போர்த்துகல் அரசு தடை விதித்துள்ளது.

வேகமாகப் பரவும் வகையில் தன்னைத் தானே தகவமைத்துக் கொண்ட கரோனா வைரஸ் பிரிட்டனில் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் அந்நாட்டுடனான விமானப் போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளன.

இந்நிலையில் போர்த்துகல் புதிய வகை கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக பிரிட்டன் விமானங்களுக்கு தடை விதித்துள்ளது. 

வியாழக்கிழமை இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட அந்நாட்டின் பிரதமர் அன்டோனியோ கோஸ்டா சனிக்கிழமை (ஜன.23) முதல் பிரிட்டன் இடையேயான விமானப் போக்குவரத்து தடை விதிக்கப்படுவதாகவும், புதிய வகை தொற்று பாதிப்பு அபாயத்தை கட்டுப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார்.

ADVERTISEMENT

Tags : UK Flights Ban
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT