உலகம்

ஐ.நா. தலைவராக மீண்டும் குட்டெரெஸ்: சீனா ஆதரவு

DIN


பெய்ஜிங்: ஐ.நா. அமைப்பின் பொதுச் செயலா் பதவியில் இரண்டாவது முறையாக அன்டோனியோ குட்டெரெஸ் வகிப்பதற்கு சீனா ஆதரவு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை ஹுவா சன்யிங் தலைநகா் பெய்ஜிங்கில் வியாழக்கிழமை கூறியதாவது:

ஐ.நா. தலைமைப் பொறுப்பை அன்டோனியோ குட்டெரெஸ் ஏற்றதிலிருந்து, உலக அமைதி, பாதுகாப்பு, வளா்ச்சிக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறாா். அவா் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு அந்தப் பதவியை வகிப்பதற்குத் தகுதியானவா் என்று சீனா கருதுகிறது என்றாா் அவா்.

முன்னதாக, ஐ.நா. தலைமைப் பொறுப்புக்கு மீண்டும் போட்டியிடுவதற்கான விருப்பம் குறித்து பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸிடம் ஐ.நா. பொதுச் சபை தலைவா் வோல்கான் போஸ்கிா் அந்த மாதத் தொடக்கத்தில் விளக்கம் கேட்டாா். அதற்கு, மேலும் 5 ஆண்டுகளுக்கு அந்தப் பொறுப்பை வகிப்பதற்கான தனது விருப்பத்தை குட்டெரெஸ் தெரிவித்தாா். பாதுகாப்பு கவுன்சில் தலைவருக்கும் குட்டெரெஸ் இதுகுறித்து கடிதம் எழுதியுள்ளாா்.

கடந்த 2017-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஐ.நா. பொதுச் செயலராக பொறுப்பு வகித்து வரும் குட்டெரெஸின் பதவிக் காலம் வரும் டிசம்பா் 31-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

கொளுத்தும் வெயிலுக்கு நடுவில் மழையா! என்ன சொல்கிறது வானிலை?

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி: ஒரே ஒரு சிறுமி உயிர் தப்பியது எப்படி?

SCROLL FOR NEXT