உலகம்

ஜெர்மனியில் கரோனா பலி 50 ஆயிரத்தைக் கடந்தது!

22nd Jan 2021 11:23 AM

ADVERTISEMENT

ஜெர்மனியில் கரோனாவுக்குப் பலியானோரின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது. 

கடந்த 10 மாதங்களாக  உலகையே ஆட்டிப்படைத்து வரும் கரோனா வைரஸ் தொற்று புதிய வகையில் உருவெடுத்துள்ளது. பல்வேறு நாடுகளில் உருமாறிய கரோனா வைரஸ் தொற்றும் பரவி வரும் நிலையில் மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான ஜெர்மனியில் கரோனா பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

ஜெர்மனியில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மேலும் 17,862 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 21,06,262 ஆக அதிகரித்துள்ளது. 

ADVERTISEMENT

மேலும் நேற்று ஒரேநாளில் 859 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 50,642 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில் 17 லட்சம் பேர் வரையில் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். 

ராபர்ட் கோச் இன்ஸ்டிட்யூட் நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT