உலகம்

கரோனா தடுப்பூசி: மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்த பிரேசில்

22nd Jan 2021 06:19 PM

ADVERTISEMENT

பிரேசில் பிரதமரின் கோரிக்கையை ஏற்று கரோனா தடுப்பூசியை அனுப்பிய மத்திய அரசுக்கு அந்நாட்டு அரசு நன்றி தெரிவித்துள்ளது.

இந்தியாவில் புணேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தால் தயாரிக்கப்படும் கோவிஷீல்ட் மற்றும் கோவேக்ஸின் தடுப்பூசிகளை பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

முன்னுரிமை அடிப்படையில் 20 லட்சம் கரோனா தடுப்பூசி மருந்துகளை பிரேசிலுக்கு அனுப்பி வைக்கக் கோரி பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சனாரோ பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து 20 லட்சம் ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளை பிரேசிலுக்கு இந்தியா அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டது. பிரேசில் வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்தியாவில் உள்ள பிரேசில் தூதரகம் மூலம் தொடர்பு கொண்டு தடுப்பூசியைப் பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டது. 

ADVERTISEMENT

இந்நிலையில் கப்பல் மூலம் அனுப்பப்பட்ட தடுப்பூசிகள் வெள்ளிக்கிழமை பிரேசிலை சென்றடைந்தன. இதற்கு இந்தியாவிற்கான பிரேசில் தூதர் ஆண்ட்ரே அரன்ஹா கொரியா நன்றி தெரிவித்துள்ளார்.

தேசிய சுகாதார கண்காணிப்பு முகமை ஒப்புதல் அளித்த ஐந்து நாட்களுக்குள் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி பிரேசில் மாநிலங்களுக்கு விநியோகிக்கப்படும் என்று பிரேசிலின் சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Tags : coronavaccine
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT