உலகம்

ஆப்கனில் தலிபான்கள் தாக்குதல்: 3 பாதுகாப்பு அதிகாரிகள் பலி

22nd Jan 2021 04:03 PM

ADVERTISEMENT

ஆப்கனில் தலிபான்கள் நிகழ்த்திய தாக்குதலில் 3 பாதுகாப்பு அதிகாரிகள் பலியானார்கள்.
ஆப்கன், நிம்ரோத் மாகாணத்தின் காஷ்ரோட் மாவட்டத்தில் உள்ள போலீஸ் சோதனைச் சாவடியில் தலிபான்கள் நேற்றிரவு திடீர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இருத்தரப்பினருக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்றது. 
இதில் 3 பாதுகாப்பு அதிகாரிகள் பலியானார்கள். 3 பேர் காயமடைந்தனர். 
எனினும் இந்த சண்டையின்போது தலிபான்கள் தரப்பினருக்கும் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டதாக நிம்ரோத் மாகாண காவல் அதிகாரி அப்துல் வஹாப் தெரிவித்துள்ளார். 
 

Tags : Afghanistan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT