உலகம்

ருமேனியா: 7 லட்சத்தை கடந்த கரோனா பாதிப்பு

DIN


புகாரெஸ்ட்: தென்கிழக்கு ஐரோப்பிய நாடான ருமேனியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 7 லட்சத்தைக் கடந்துள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாட்டில் சுமாா் 3,000 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன், அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 7,00,898-ஆக உயா்ந்துள்ளது.

கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 116 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்ததைத் தொடா்ந்து, நாட்டின் மொத்த கரோனா பலி 17,485-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

புதன்கிழமை நிலவரப்படி, ருமேனியாவில் கரோனா உறுதி செய்யப்பட்ட 6,35,871 போ் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா்; 47,542 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 1,054 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

102 மக்களவை தொகுதிகளில் இன்று பதிவான வாக்குப்பதிவு விவரம்

வாக்களிப்பதற்காக அமெரிக்காவிலிருந்து தஞ்சை வந்த மென்பொறியாளர்

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

SCROLL FOR NEXT