உலகம்

இலங்கையில் 55 ஆயிரத்தைத் தாண்டியது கரோனா பாதிப்பு

21st Jan 2021 06:37 PM

ADVERTISEMENT

இலங்கையில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 55 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸின் இரண்டாம் அலை அண்டை நாடான இலங்கையிலும் வேகமாக பரவி வருகிறது. இங்கு கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 700 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 
இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 55,189ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கரோனாவிலிருந்து இதுவரை 47,215 பேர் குணமடைந்துள்ளனர். 
தற்போதைய நிலைவரப்படி 7,700 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும் கரோனாவுக்கு இதுவரை 274 பேர் பலியாகியுள்ளனர் என்று அந்நாட்டின் சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. 
 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT