உலகம்

அமெரிக்கா: கரோனா பலி எண்ணிக்கை 4 லட்சத்தைக் கடந்தது 

DIN


நியூயார்க்: அமெரிக்காவில் தினசரி கரோனா பலி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அந்த நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,768 போ் கரோனா பாதிப்பால் உயிரிழந்தனா். இதனால் தொற்று பாதிப்பால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,11,486 ஆக அதிகரித்துள்ளது. தொற்று பாதிப்பு எண்ணிக்கை 2,48,06,964 ஆக உயர்ந்துள்ளது. 

அமெரிக்காவில் மாகாண அளவிலான இறப்பு எண்ணிக்கை பட்டியலில் நியூயார்க்கில் 41,350 பேரும்,  கலிஃபோர்னியா 33,763 பேரும், டெக்சாஸில் 32,729 பேரும், புளோரிடாவில் 24,274 பேரும் உயிரிழந்துள்ளனர். 

நியூ ஜெர்சி, இல்லினாய்ஸ், பென்சில்வேனியா, மிச்சிகன், மாசசூசெட்ஸ் மற்றும் ஜார்ஜியா ஆகிய மாகாணங்கள் 12 ஆயிரத்துக்கும் அதிகமான இறப்புகளைக் கொண்ட மாகாணங்கள் ஆகும். 

உலக அளவில் தொற்று பாதி மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது, உலக அளவில் தொற்று பாதிப்பு மற்றும் பலி சதவீதத்தில் அமெரிக்காவில் மட்டும் முறையே 25 மற்றும் 20 சதவீதம். 

கடந்த ஆண்டு மே 27 ஆம் தேதி 1 லட்சமாக இருந்த பாதிப்பு,  செப்டம்பர் 22 இல் 2 லட்சமாக உயர்ந்து முதலிடம் பிடித்தது, டிசம்பர் 14 ஆம் தேதி 3 லட்சமாக உயர்ந்தது. 

அமெரிக்காவில் வரும் மே 1-க்குள் இறப்பு எண்ணிக்கை 5,66,720 இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அங்கித் திவாரியிடம் பறிமுதல் செய்யப்பட்ட காரை ஒப்படைக்கக் கோரிய மனு தள்ளுபடி

வில்பட்டி ஊராட்சியில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

பழனி கிரி வீதியில் இயங்கும் ஒரே பேருந்து: பக்தா்கள் அவதி

தில்லி முதல்வரை தகுதிநீக்கம் செய்ய கோரி மனு தில்லி நீதிமன்றம் தள்ளுபடி

தோ்தல் நடத்தை விதி மீறல்: டி.டி.வி.தினகரன் மீது வழக்கு

SCROLL FOR NEXT