உலகம்

வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறினார் டிரம்ப்!

DIN

வாஷிங்டன்: அமெரிக்க அதிபருக்கான வெள்ளை  மாளிகையில் இருந்து தற்போதைய அதிபரான டொனால்ட் டிரம்ப் வெளியேறினார்.

இந்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்ப்பும், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனும் போட்டியிட்டனர்.

பலத்த எதிர்பார்ப்புகளின் மத்தியில் இதன் முடிவுகள் வெளியான நிலையில், தேர்தல் குழுவின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று ஜோ பைடன் வெற்றி பெற்றார்.

ஆனால் அதிபர் தேர்தல் முடிவுகளை ஏற்க மறுத்த டிரம்ப், அதனை எதிர்த்து நடத்திய சட்டப் போராட்டங்களில் உரிய பலன் கிடைக்கவில்லை.

அதன் உச்சகட்டமாக ஜோ பைடன் வெற்றி பெற்றதற்கான அதிகாரப்பூர்வ முடிவினை அறிவிக்கும் நாளில் அவரது ஆதரவாளர்கள் ‘கேபிடல் அரங்கில்’ நடத்திய வன்முறை நிரம்பிய போராட்டக் கட்சிகள் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தின. நான்கு பேர் இதில் உயிரிழந்தனர். பின்னர் ஒருவழியாக டிரம்ப் தனது தோல்வியை ஏற்றார்.

இந்நிலையில் அமெரிக்க அதிபருக்கான வெள்ளை  மாளிகையில் இருந்து தற்போதைய அதிபரான டொனால்ட் டிரம்ப் வெளியேறினார்.

புதிய அதிபராக ஜோ பைடன் புதனன்று பதவியேற்க உள்ள நிலையில், தனது பதவிக்காலத்தில் டிரம்ப் கடைசி முறையாக வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினார்.   

அவர் வெளியேறிய போது அவருக்கு குண்டுகள் முழங்க சிவப்புக் கம்பள மரியாதை அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ருதுராஜ் சதம், துபே அரைசதம்: லக்னௌவுக்கு 211 ரன்கள் இலக்கு!

மாயோள்..!

காங்., ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பது குற்றம்: மோடி

வீடு புதுப்பிப்பு: ராகுல் காந்தி அமேதியில் போட்டி?

24 மணிநேரத்தில் 200 நிலநடுக்கம்!

SCROLL FOR NEXT