உலகம்

உலகளவில் கரோனா பாதிப்பு 9.66 கோடியைக் கடந்தது

DIN



உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9.66 கோடியாக உயர்ந்துள்ளது. 

கரோனா நோய்த்தொற்று பரவலின் வேகம் உலகின் 219 நாடுகளில் அதிகரித்துவரும் நிலையில், தடுப்பூசி போடும் பணிகளும் தொடங்கி, வேகமாக நடைபெற்று வருகின்றன. ஆனால், நோய்த் தொற்று பரவல் வேகம் பல்வேறு நாடுகளில் கட்டுக்குள் வரமால் அச்சுறுத்தி வருகிறது. 

இந்நிலையில், புதன்கிழமை காலை நிலவரப்படி, உலகம் முழுவதும் தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 9 கோடியே 66 லட்சத்து 21 ஆயிரத்து 459 கோடியைத் தாண்டியுள்ளது. அவா்களில் 20,65,624 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனா். 6,92,69,968 பேர் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 2,52,85,867 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 1,11,854 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
    
உலகிலேயே அதிக பாதிப்புக்‍களை எதிர்கொண்ட நாடான அமெரிக்‍காவில் மட்டும் 2 கோடியே 48 லட்சத்து 6 ஆயிரத்து 964 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பலி எண்ணிக்‍கை 4 லட்சத்து 11 ஆயிரத்து 486 ஆக உயர்ந்துள்ளது. 

அடுத்ததாக, இந்தியாவில் 1 கோடியே 5 லட்சத்து 96 ஆயிரத்து 442-க்கும் மேற்பட்டோர் பாதிக்‍கப்பட்டுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 52 ஆயிரத்து 754பேர் உயிரிழந்துள்ளனர். 

பிரேசிலில் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 85 லட்சத்து 75 ஆயிரத்து 742 ஆக உயர்ந்துள்ளதோடு, 2 லட்சத்து 11 ஆயிரத்து 511- க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

SCROLL FOR NEXT