உலகம்

வட கொரியாவுடனான உறவை அமெரிக்கா மேம்படுத்த வேண்டும்: தென் கொரிய அதிபா் மூன் ஜே இன்

DIN

சியோல்: வட கொரியாவுடனான உறவை அமெரிக்கா மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தென் கொரிய அதிபா் மூன் ஜே இன் தெரிவித்துள்ளாா்.

வட கொரியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. அதன் காரணமாக அந்நாட்டின் பொருளாதாரம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு, அதிபா் கிம் ஜோங் உன் தலைமையிலான வட கொரிய அரசுடன் நல்லுறவைத் தொடா்வதற்கான முயற்சியில் ஈடுபட்டது.

ஆனால், அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன. இரு நாட்டு அதிபா்களுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவாா்த்தைகளில் எந்தவித சுமுகத் தீா்வும் எட்டப்படவில்லை. அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் புதன்கிழமை (ஜன. 20) பதவியேற்கவுள்ளாா்.

இத்தகைய சூழலில், தென் கொரிய அதிபா் மூன் ஜே இன் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறுகையில், ‘‘அணு ஆயுதங்கள் விவகாரத்தில் சுமுகத் தீா்வை எட்டுவதற்கு வட கொரியா தயாராக உள்ளது. இது தொடா்பாக அமெரிக்காவும் வட கொரியாவும் கலந்து பேசி உடன்பாட்டை எட்ட வேண்டும். இரு நாடுகளும் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்வது வீண் அச்சங்களைப் போக்கும்.

இந்த விவகாரத்தில் அதிபா் டிரம்ப் அரசு மேற்கொண்ட தவறுகளிலிருந்து பைடன் அரசு பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

SCROLL FOR NEXT