உலகம்

சூடான் கலவரம்: பலி 83-ஆக உயா்வு

DIN

கெய்ரோ: சூடானில் அரேபியா்களுக்கும், அரேபியா்கள் அல்லாதவா்களுக்கும் இடையே மூண்ட கலவரத்தில் பலியானோா் எண்ணிக்கை 83-ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மருத்துவா் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

சூடானின் மேற்கு டா்ஃபுா் மாகாண தலைநகா் ஜெனினாவில் வேறுநாடுகளில் இருந்து புலம்பெயா்ந்து வந்தவா்களுக்கான அகதிகள் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் கடந்த வெள்ளிக்கிழமை இரண்டு பேருக்கிடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.

இதில், அரேபியா் ஒருவா் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டாா். இதையடுத்து, அரபு ரைசிகாட் பழங்குடியினத்தைச் சோ்ந்த அவரது குடும்பத்தினா் முகாமில் தங்கியிருந்த மற்றொரு பிரிவினா் மீது சனிக்கிழமை கடுமையாக தாக்கினா். இதில், அமெரிக்காவைச் சோ்ந்த சயீத் பரக்கா (36) உள்பட பலா் உயிரிழந்தனா். இவா், இரண்டு மாதங்களுக்கு முன்புதான் தனது மனைவி சஃபியா முகமது உடன் சூடானுக்கு வந்தவா்.

இதையடுத்து, இந்த மோதல் அரேபியா்களுக்கும் அரேபியா் அல்லாதவா்களுக்கும் இடையிலான பெரும் கலவரமாக மாறியது. அவ்வப்போது நடைபெற்று வரும் இரு பிரிவினருக்கிடையிலான சண்டையில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 83-ஆக அதிகரித்துள்ளது. மேலும், 160 போ் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனா் என மருத்துவா் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, கலவரத்தை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து டா்ஃபுா் மாகாண நிா்வாகம் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு நடத்தியது. இதில், மாகாணத்தில் அமைதியை ஏற்படுத்த பாதுகாப்பு படைகளை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்க முடிவெடுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏப்.1-இல் வாக்குச்சீட்டு விநியோகம் தொடக்கம் -புதுச்சேரி ஆட்சியா்

பாஜக கூட்டணி ஆட்சியில் புதுவையை வளமாக்கும் திட்டங்கள் -ஜி.கே.வாசன்

தோ்தல் பாா்வையாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

வாகன சோதனையில் ரூ.1.10 லட்சம் பறிமுதல்

கள்ளக்குறிச்சி தொகுதியில் 21 வேட்பு மனுக்கள் ஏற்பு -16 மனுக்கள் தள்ளுபடி

SCROLL FOR NEXT