தஹர்: ராணுவத்துடன் நிகழ்ந்த மோதலில் ஆப்கானிஸ்தானில் எட்டு தலிபான்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:
ஆப்கானின் தஹர் மாகாணத்தில் உள்ள க்வாஜா கார் மாவட்டத்தில் ஞாயிறு இரவு தேசிய ராணுவத்துடன் நடந்த மோதலில் எட்டு தலிபான்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ADVERTISEMENT
அதேபோல கந்தஹார் மாகாணத்தில் உள்ள செரியா மற்றும் அர்கன்தாப் மாவட்டங்களில் நடந்த தேடுதல் வேட்டையில் 25 தலிபான்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் எட்டு பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன் மறைவிடங்கள், பதுங்கு குழிகள் மற்றும் ஆயுதங்களும் கண்டறியப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.