சூடானின் மேற்கு டார்பூர் மாநிலத்தின் தலைநகரான அல் ஜெனீனாவில் பழங்குடியினரிடையே ஏற்பட்ட மோதலில் 83 பேர் உயிரிழந்தனர் மற்றும் 160 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டர்பர் மாகாணத்தின் உள்ள அல் ஜெனீனா நகரில் மசாலித் என்ற பழங்குடியின குழுவினருக்கும் மற்றும் அராப் பழங்குடியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட வன்முறையில், வீடுகள் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
கடந்த 2 நாள்களாக தொடர்ந்து நடைபெற்ற இந்த மோதலில் 83 பேர் கொல்லப்பட்டனர். 160-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ADVERTISEMENT
இதையடுத்து, மேற்கு டார்பூரில் சனிக்கிழமை ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது.