உலகம்

துருக்கியில் சரக்கு கப்பல் கவிழ்ந்து விபத்து: 2 பேர் பலி, 6 பேர் மீட்பு

18th Jan 2021 11:31 AM

ADVERTISEMENT

 

துருக்கியின் கருங்கடல் மாகாணமான பார்ட்டின் கடற்கரையில் சரக்கு கப்பல் கவிழ்ந்ததில் இரண்டு பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

ரஷிய நாட்டுக் கொடியுடன் கப்பலில் 13 பேர் குழுவினருடன்  சரக்குக் கப்பல் ஞாயிறன்று வந்துகொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேலும், துருக்கிய கடலோர காவல்படை தனது இணையதளத்தில் 12 ஊழியர்களைக் கொண்டிருப்பதாகவும், கப்பலில் பலாவ் கொடியுடன் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

இதற்கிடையில், ஹூரியட் தினசரி அந்தக் குழுவில் இரண்டு ரஷியர்களும் 10 உக்ரேனியர்களும் இருந்ததாக அறிவித்தனர்.

துருக்கிய போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சகம் ஒரு டிவிட்டரில், அர்வின் என்ற கப்பல் மோசமான வானிலை காரணமாக இரண்டாக உடைந்து மிதந்ததாகக் கூறினார்.

இந்த கப்பல் ஜார்ஜியாவிலிருந்து பல்கேரியா செல்லும் வழியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதற்காக, மீட்பு முயற்சிகளுக்கு ஆதரவாக துருக்கிய கடற்படை போர்க் கப்பல் ஒன்றை நிறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags : ship capsize
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT