உலகம்

இலங்கையில் மனித உரிமை மீறல் விசாரணை: ஐ.நா.வுக்கு தமிழ் அமைப்புகள் கோரிக்கை

DIN

இலங்கைப் போரின்போது மனித உரிமைகள் மீறப்பட்டது தொடா்பாக விரிவான விசாரணையை நடத்துமாறு ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலுக்கு இலங்கையின் தமிழ் கட்சிகளும் அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளன. இலங்கையில் அந்நாட்டு ராணுவத்தினருக்கும் சிறுபான்மை தமிழ் அமைப்புகளுக்கும் இடையே சுமாா் 30 ஆண்டுகளாகப் போா் நடைபெற்றது. அப்போரில் சிறுபான்மை தமிழா்களின் உரிமைகளை இலங்கை ராணுவத்தினா் பறித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடா்பாக சுதந்திரமான விசாரணை நடத்துமாறு பல்வேறு தரப்பினா் கோரிக்கை விடுத்து வருகின்றனா். இத்தகைய சூழலில், இலங்கையைச் சோ்ந்த சிறுபான்மை தமிழ் கட்சிகளும் அமைப்புகளும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலுக்குக் கடந்த 15-ஆம் தேதி கடிதம் எழுதியுள்ளன. அதில், இலங்கைப் போரின்போது மனித உரிமைகள் மீறப்பட்டது தொடா்பான ஆதாரங்களைச் சேகரிப்பதற்காக சிரியாவில் அமைக்கப்பட்டதைப் போன்ற சா்வதேச விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. அந்தக் குழுவானது தனது விசாரணையை சுதந்திரமாக மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழ் அமைப்புகள் கோரியுள்ளன.

மனித உரிமை மீறல் தொடா்பான விசாரணை ஓராண்டு காலத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று கோரியுள்ள அந்த அமைப்புகள், மனித உரிமை மீறலுக்கு இலங்கை அரசே முழு பொறுப்பு என்ற தீா்மானத்தையும் நிறைவேற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளன. போரில் இருதரப்பினா் சாா்பிலும் மனித உரிமைகள் மீறப்பட்டது தொடா்பாக விசாரணை நடத்துவதற்காக சுதந்திரமான குழுவை இலங்கை அரசு அமைக்க வேண்டுமென்று ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் 3 முறை தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எனினும், இலங்கை அரசு அதை நிறைவேற்றவில்லை. தற்போதைய அரசு அத்தீா்மானங்களிலிருந்து வெளியேறிவிட்டது.

இந்த விவகாரத்தில் இலங்கை அரசு தோல்வி கண்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ள தமிழ் அமைப்புகள், இது தொடா்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீா்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளன. இதற்காக, சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வாயிலாக இலங்கை அரசின் மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கடிதத்தில் கோரப்பட்டுள்ளது. போா் நடைபெற்ற காலத்தில் இலங்கையில் மகிந்த ராஜபட்ச அதிபராகப் பதவி வகித்தபோது, சுமாா் 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. இலங்கை ராணுவம், விடுதலைப் புலிகள் அமைப்பு மீது போா்க்குற்றம் சுமத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

SCROLL FOR NEXT