உலகம்

உலகளவில் கரோனா பாதிப்பு 9.43 கோடியாக உயர்வு

17th Jan 2021 09:45 AM

ADVERTISEMENT


உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 9.49 கோடியாக உயர்ந்துள்ளது. 

கரோனா நோய்த்தொற்று பரவலின் வேகம் உலகின் 219 நாடுகளில் அதிகரித்துவரும் நிலையில், தடுப்பூசி போடும் பணிகளும் தொடங்கி, வேகமாக நடைபெற்று வருகின்றன. ஆனால், உலக மக்கள் அனைவருக்‍கும் விரைந்து தடுப்பூசி போடுவது என்பது எளிதில் மேற்கொள்ள வாய்ப்புக்‍கள் இல்லாத நிலையில், நோய்த் தொற்று பரவல் வேகம் பல்வேறு நாடுகளில் கட்டுக்குள் வரமால் அச்சுறுத்தி வருகிறது. 

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, உலகம் முழுவதும் தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்‍கை 9.49 கோடியைத் தாண்டியுள்ளது. அவா்களில் 20,30,924 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனா். 6,77,73,937 பேர் பூரண குணமடைந்துள்ளனா். சுமாா் 2,51,47,082 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 1,11,614 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
    
உலகிலேயே அதிக பாதிப்புக்‍களை எதிர்கொண்ட நாடான அமெரிக்‍காவில் மட்டும் 2 கோடியே 43 லட்சத்து 6 ஆயிரத்து 43 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பலி எண்ணிக்‍கை 4 லட்சத்து 5 ஆயிரத்து 261 ஆக உயர்ந்துள்ளது. உலக அளவில் ஐரோப்பிய நாடுகளில் தான் நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழப்போரின் எண்ணிக்‍கை மிகவும் அதிகமாக உள்ளது.
    
இந்தியாவில் 1 கோடியே 5 லட்சத்து 58 ஆயிரத்து 710-க்கும் மேற்பட்டோர் பாதிக்‍கப்பட்டுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 52 ஆயிரத்து 311 பேர் உயிரிழந்துள்ளனர். 

பிரேசிலில் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 84 லட்சத்து 56 ஆயிரத்து 705 ஆக உயர்ந்துள்ளதோடு, 2 லட்சத்து 9 ஆயிரத்து 350- க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT