உலகம்

நாடாளுமன்ற வன்முறை தொடர்பாக அமெரிக்க சுகாதார செயலர் ராஜிநாமா

16th Jan 2021 08:14 PM

ADVERTISEMENT

அமெரிக்க நாடாளுமன்ற வன்முறை தொடர்பாக அந்நாட்டின் சுகாதார மற்றும் சேவைகள் செயலர் அலெக்ஸ் அசார் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக பொறுப்பேற்க உள்ள ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் அதற்கான சான்றை வழங்கும் நடைமுறை வாஷிங்டன்னில் உள்ள நாடாளுமன்ற கட்டடத்தில் கடந்த ஜனவரி 6ஆம் தேதி நடைபெற்று வந்தது. 

அப்போது அமெரிக்க அதிபரின் தேர்தலில் ஜோ பைடன் வெற்றியை முறியடிக்கும் முயற்சியாக டிரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற கட்டடத்துக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதில் 4 பேர் பலியாகினர். 

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக அந்நாட்டின் சுகாதார மற்றும் சேவைகள் செயலர் அலெக்ஸ் அசார் தனது பதவியை ராஜிநாமா செய்தார். அவர் தனது ராஜிநாமா கடிதத்தை அதிபர் டிரம்பிடம் வழங்கினார். 

ADVERTISEMENT

அவர் தனது கடிதத்தில் “நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதல்கள் நமது ஜனநாயகம் மற்றும் உலகின் அமைதியான அதிகார மாற்றங்களை மேற்கொண்ட அமெரிக்க பாரம்பரியத்தின் மீதான தாக்குதல்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் “எந்தவொரு வன்முறையையும் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறேன். வாஷிங்டனிலோ அல்லது பிற இடங்களிலோ வன்முறை சம்பவங்கள் மூலம் அதிகார மாற்றங்களை சீர்குலைக்க யாரும் முயற்சிக்கக் கூடாது” என அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Tags : USA Capitol riot
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT