உலகம்

ஆப்கனில் தலிபான்கள் தாக்குதலில் 13 காவலர்கள் பலி

16th Jan 2021 06:42 PM

ADVERTISEMENT

ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெராத் மாகாணத்தில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் காவல்துறையைச் சேர்ந்த 13 பேர் பலியாகியுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெராத் மாகாணத்தில் வெள்ளிக்கிழமை இரவு ஊடுருவிய தலிபான் அமைப்பைச் சேர்ந்த 3 பேர் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்தத் தாக்குதலில் காவல்துறையைச் சேர்ந்த 13 பேர் பலியாகினர். 

மேலும் இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட தலிபான்கள் காவலர்களின் ஆயுதங்களையும் கைப்பற்றி சென்றனர். 

ஹெராத் மாகாணத்தில் தலிபான்கள் நடத்திய தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

Tags : afghanisthan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT