உலகம்

இந்தோனேசிய நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 42ஆக உயர்வு

16th Jan 2021 06:12 PM

ADVERTISEMENT

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.

இந்தோனேசியாவின் மேற்கு சுலவேசி மாகாணத்தில் வெள்ளிக்கிழமை பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.2ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் குடியிருப்புகள் இடிந்து விழுந்தன.

அதிகாலை 2.28க்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பலியானவர்களின் எண்ணிகை 42ஆக உயர்ந்துள்ளது. மேலும் 630க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தில் மின்சாரம், தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. மேலும் சாலைகள், வீடுகள்,உணவகங்கள், அரசு கட்டிடங்கள், மருத்துவமனைகள் ஆகியவை சேதமடைந்துள்ளன.

ADVERTISEMENT

கடந்த 2004-ஆம் ஆண்டில், இந்தோனேசியாவின் சுமத்ரா தீவு அருகே கடல் பகுதியில் ஏற்பட்ட 9.1 ரிக்டா் அளவிலான நிலநடுக்கத்தின் விளைவாக மிகப் பெரிய சுனாமி ஏற்பட்டது. இதில், இந்தியா உள்ளிட்ட இந்தியப் பெருங்கடல் நாடுகளில் 2.3 லட்சம் போ் உயிரிழந்தனா். அவா்களில் 1.7 லட்சம் போ் இந்தோனேசியாவைச் சோ்ந்தவா்கள்.

Tags : Indonesia earthquake
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT