உலகம்

போர்த்துகலில் பொதுமுடக்கம் அறிவிப்பு

DIN

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு தழுவிய பொதுமுடக்கம் போர்த்துகலில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று பரவல் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளும் பொதுமுடக்கம் அறிவித்து தற்போது படிப்படியாக மீண்டு வருகின்றன.

இந்நிலையில் போர்த்துகல் நாட்டில் அதிகரித்து வரும் கரோனா தொற்று பரவல் காரணமாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை போர்த்துகீசிய பிரதமர் அன்டோனியோ கோஸ்டா வியாழக்கிழமை வெளியிட்டார்.

15 நாள்கள் விதிக்கப்பட்டுள்ள இந்தப் பொதுமுடக்கத்தையொட்டி அத்தியாவசிய பணிகள் தவிர மற்றவைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது போர்சுக்கல் நாட்டின் 9ஆவது பொதுமுடக்க அறிவிப்பாகும்.

போர்த்துகலில் கடந்த 24 மணி நேரத்தில் 10,556 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை 8,326 பேர் தொற்று பாதிப்பால் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு புதுப்பிப்பு: ராகுல் காந்தி அமேதியில் போட்டி?

24 மணிநேரத்தில் 200 நிலநடுக்கம்!

ரூபன் படத்தின் டிரெய்லர்

இஸ்ரேல்- ஹிஸ்புல்லா: தொடரும் பரஸ்பர தாக்குதல்!

உயிர் தமிழுக்கு படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT