உலகம்

டொனால்ட் டிரம்ப் மீது யூடியூப் அதிரடி நடவடிக்கை

13th Jan 2021 10:53 AM

ADVERTISEMENT

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துகளை யூடியூப் நிறுவனம் நீக்கியது.

வன்முறையை தூண்டும் வகையிலும், விதிகளுக்கு புறம்பாக இருந்ததாகவும் அதனை யூடியூப் நிறுவனம் நீக்கியுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழ வழங்கும் நிகழ்வில் நாடாளுமன்றத்தில் முன்பு குவிந்த டிரம்ப் ஆதரவாளர்கள் கல்வரத்தில் ஈடுபட்டனர்.

அமெரிக்க அதிபர் பதவியிலிருந்து விடுபட இருக்கும் டிரம்ப் வெளியிட்ட சுட்டுரைப் பதிவே கலவரத்திற்கு காரணம் என்று கூறப்பட்டது. இதனையடுத்து அவரது சுட்டுரைப் பக்கம் நிரந்தரமாக முடக்கப்பட்டது.

ADVERTISEMENT

அந்தவகையில் சுட்டுரை, முகநூல், இன்ட்ஸ்டாகிராமைத் தொடர்ந்து தற்போது யூ டியூப் நிறுவனமும் டிரம்ப்பிற்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளது.

Tags : donald trump
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT