உலகம்

தலிபான் தாக்குதலில் 6 ஆப்கன் படையினர் பலி

9th Jan 2021 05:14 PM

ADVERTISEMENT

ஆப்கானிஸ்தானில் சோதனைச் சாவடியில் தலிபான் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 5 ஆப்கன் படை வீரர்களும், ஒரு படைப்பிரிவு தலைவரும் பலியாகினர்.

ஆப்கானிஸ்தானின் தர்காட் மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடியில் வெள்ளிக்கிழமை இரவு தலிபான்கள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் ஆப்கானிஸ்தானின் படைப்பிரிவைச் சேர்ந்த 5 ராணுவ வீரர்களும், 6 ஆவது பட்டாலியனின் 2 ஆவது படைப்பிரிவு தலைவர் சுல்தான் முகமதுவும் பலியாகியுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் அரசுக்கும் தலிபான் அமைப்பினருக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தை தொடங்கியுள்ள நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

Tags : Afghanisthan
ADVERTISEMENT
ADVERTISEMENT