உலகம்

டிரம்ப் முகநூல், இன்ஸ்டாகிராம் கணக்கு கால வரையன்றி முடக்கம்

8th Jan 2021 08:25 AM

ADVERTISEMENT

 

அமெரிக்க அதிபர் டிரம்பின் முகநூல், இன்ஸ்டாகிராம் பக்கங்களை கால வரையின்றி முடக்குவதாக முகநூல் நிறுவனர் மாா்க் ஸக்கா்பா்க் அறிவித்துள்ளார். 

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தூண்டுதலால் அவரது ஆதரவாளா்கள் புதன்கிழமை அமெரிக்க நாடாளுமன்றத்துக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதில்  4 பேர் உயிரிழந்தனர். 

இதனிடையே, சமூக வலைதளம் மூலம் டிரம்ப் விடுத்த அழைப்பின்பேரில்தான் அவரது ஆதரவாளா்கள் வாஷிங்டனில் திரண்டதுடன், நாடாளுமன்றத்தில் வன்முறையில் ஈடுபட்டதால், அதிபா் டிரம்ப்பின் முகநூல், சுட்டுரை மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை ஒரு நாளைக்கு முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னா் ஜன.20 வரை முடக்கப்படுவதாக அந்நிறுவனங்களின் தலைவா் மாா்க் ஸக்கா்பா்க் அறிவித்தார். இதனால், அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்கும் ஜனவரி 20-ஆம் தேதி வரை டிரம்ப் முகநூல், இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்த முடியாது என்பது உறுதியானது. 

ADVERTISEMENT

இந்நிலையில், அமெரிக்க நாடாளுமன்றத்துக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டதன் எதிரொலியாக, அதிபர் டிரம்பின் முகநூல், இன்ஸ்டாகிராம் பக்கங்களை கால வரையின்றி முடக்குவதாக முகநூல் நிறுவனர் மாா்க் ஸக்கா்பா்க் அறிவித்துள்ளார். 

Tags : violent attack US Capitol attack
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT