உலகம்

டோக்கியோவில் அவசர நிலை பிரகடனம்

8th Jan 2021 08:57 AM

ADVERTISEMENT


டோக்கியோ: கரோனா நோய்த்தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து ஜப்பான் தலைநகர் டோக்கியோ மற்றும் அதனைச்சுற்றியுள்ள மூன்று பகுதிகளுக்கு அவசர நிலை பிரகடனத்தை அறிவித்துள்ளது ஜப்பான் அரசு. 

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஆண்டு இறுதி மற்றும் புத்தாண்டு விடுமுறைக்குப் பின்னர் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து தொற்று பரவலை தடுக்க, தேசிய அரவசர நிலை பிரகடனத்தை அந்நாட்டு பிரதமர் யோஷிஹைட் அறிவித்துள்ளார். 

பிப்ரவரி 7 ஆம் தேதி வரை, மக்கள் யாரும் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம், ஷாப்பிங் மால்கள் மற்றும் பள்ளிகள் திறந்திருக்கும். திரையரங்குகள், அருங்காட்சியகங்கள் மற்றும் பிற நிகழ்வுகளில் பார்வையாளர்களின் எண்ணிக்கையை குறைக்குமாறும், மக்கள் கூட்டமாக கூடக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் உணவகங்கள், பார்களை இரவு 8 மணிக்குள் மூடும்படி அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.   

ADVERTISEMENT

Tags : emergency Tokyo area
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT