உலகம்

ஒரு மணி நேரத்திற்கு 138 கோடி வருமானம்: உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க்

8th Jan 2021 06:24 PM

ADVERTISEMENT

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் தலைவரான எலான் மஸ்க் உலகின் முன்னணி பணக்காரராக உயர்ந்துள்ளார்.

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் தலைவராக இருப்பவர் எலான் மஸ்க். இவரது நிறுவனம் தொழில்நுட்பம், விண்வெளி ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில் உலகின் முன்னணி பணக்காரர்களின் பட்டியலில்  1885 கோடி அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் எலான் மஸ்க் முதலிடம் பிடித்துள்ளார். எலான் மஸ்க் கடந்த 2020 ஆம் ஆண்டில் 1650 கோடி அமெரிக்க டாலர்களை ஈட்டியுள்ளார். இது சராசரியாக ஒவ்வொரு மணி நேரத்திற்கும் இந்திய ரூபாய் மதிப்பில் 138 கோடி வருவாயாக பெறுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ப்ளூம்பெர்க் அமைப்பு வெளியிட்ட தரவுகளின்படி உலகின் முன்னணி 20 பணக்காரர்களில், 14 அமெரிக்கர்கள் உள்ளனர். மேலும் எலான் மஸ்க் உள்பட எட்டு பேர் முதல் 10 இடங்களில் உள்ளனர்.

ADVERTISEMENT

எலான் மஸ்கைத் தொடர்ந்து அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஜெஃப் பெசோஸ் 1870 கோடி அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் 2ஆம் இடத்திலும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பில் கேட்ஸ் 1320 கோடி அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் 3ஆம் இடத்திலும் உள்ளனர்.

Tags : elonmusk
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT